தமிழ்நாடு

கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது – அமைச்சர் துரைமுருகன்

Published by
லீனா

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

இதனை தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் அவர்கள்  முல்லைப் பெரியாறு பிரச்சினையை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கேரளாவை விட விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருப்பது கர்நாடகா. காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதிக்காத போக்கு நிலவுகிறது.

கர்நாடகாவிடம் நாங்கள் யாசகம் கேட்கவில்லை. நீரை தான் கேட்கிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது நமது உரிமையை அடகு வைப்பதாகிவிடும். கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது. கர்நாடகாவிடம் ஒரு கை அளவு நீர் இருந்தாலும் அதில் தமிழகத்தின் பங்கு உண்டு. கர்நாடக அணையில் தண்ணீர் இருப்பதால் தான் நான் கேட்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

2 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago