மதிமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைப்பு..!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கவாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு ஒன்றை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக தனது தேர்தல் அறிக்கை மற்றும் பேச்சுவார்த்தை குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள மதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு எடுத்து நடத்த4 பேர் கொண்ட குழுவை மதிமுக அறிவித்துள்ளது. அதன்படி மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அத்திரிதாஸ், தேர்தல் பணிச்செயலாளர் வி.சேஷன் ஆகியோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திருச்சி புறப்பட்டார் பிரதமர் மோடி!
மறுமலர்ச்சி திமுக சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தணிக்கைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ஆகியோர் உள்ளனர்.
நேற்று திமுக தேர்தல் அறிக்கை குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, பேச்சுவார்த்தை குழு ஆகியவற்றை அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு கனிமொழி எம்.பி தலைமையிலும், பேச்சுவார்த்தை குழு திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.