அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது – மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தான் தமிநாட்டுக்குள் நீட் தேர்வு நுழைந்தது. அதிமுக ஆட்சியில் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான முதல்படியாக நீதியரசர் எ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றையும் அமைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு ரத்து தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளார். நிச்சயம் நீட்டுக்கு விலக்கு கிடைக்கும். நீட் தேர்வு இப்போது தான் வந்தது போல ஓபிஎஸ் பேசுகிறார் என விமர்சித்துள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மாணவ சமூகத்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது யார்? மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அவர் ஏன் அப்படி ஒரு அறிக்கை வெளியிட்டார் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.