பொதுத்தேர்வுக்குப் பின் மீண்டும் நீட் பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னர் மீண்டும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் 17ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை E – Box நிறுவனம் சோதனை பயிற்சியை
மாநிலம் முழுவதும் உள்ள 412 மையங்களிலும் வழங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சோதனை பயிற்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணைய வசதியை சரிபார்த்துக் கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து சோதனை பயிற்சி வெற்றியடைந்தால், ஏப்ரல் இறுதி வரை தொடர்ச்சியாக மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வரும் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)