கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடி
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு.
சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது, தனியார் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே வசதியாக உள்ளது. 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும். கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதையே ஆளுநரிடம் கோரிக்கையாக விடுகிறோம் என தெரிவித்தார்.
மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால், பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும், அதனால்தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம் என்று ஆளுநர் முஞ்சிலையில் அமைச்சர் கூறினார். அப்போது முதலமைச்சரும் உடன் இருந்தார்.