மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர். இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது.
இந்நிலையில் நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது.திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் அடுத்து மேலும் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதே போல் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த மாணவி தான் மோனிஷா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.இந்நிலையில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை என்றுமே பிரச்சனைகளுக்கு முடிவாகாது என்ற மனநிலை மாணவர்களிடம் இன்றைய காலத்தில் ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது.மேலும் மாணவ,மாணவிகளிடம் இன்றைய கல்வி முறை தன்னபிக்கையை ஏற்படுத்த தவறுகிறதா..? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…