3 வது உயிரை காவு வாங்கிய நீட் ..!தொடரும் தற்கொலைகள்..முடிவாகிறதா..?

Default Image

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு முறை அண்மையில் கொண்டு வரப்பட்டது.இந்தியா முழுவதும் உலா மாணவர்கள் இந்த தேர்வினை கடும் கட்டுபாடுகளுடன் எழுதினர். இந்த தேர்விற்கான முடிவுகள் வெளியாகியது.
Image result for neet suicide 2019 tamilnadu
இந்நிலையில் நீட் தேர்வு மருத்துவ படிப்பிற்கு பதிலாக மரணத்தையே மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது.திருப்பூரை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த நிலையில் அடுத்து மேலும் ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Image result for neet suicide 2019 tamilnadu
அதே போல் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image result for neet suicide 2019 tamilnadu
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே கூனிமேடு குப்பத்தைச் சேர்ந்த மாணவி தான் மோனிஷா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.இந்நிலையில் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை என்றுமே பிரச்சனைகளுக்கு முடிவாகாது என்ற மனநிலை மாணவர்களிடம் இன்றைய காலத்தில் ஏற்படுவது குறைந்து காணப்படுகிறது.மேலும் மாணவ,மாணவிகளிடம் இன்றைய கல்வி முறை தன்னபிக்கையை ஏற்படுத்த தவறுகிறதா..? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்