நீட் தேர்வு முறைகேடு.. உதித் சூர்யா உண்மை சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு.!
கடந்த ஆண்டு நீட் தேர்வில் மோசடி விகாரத்தில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உதித் சூர்யா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கல்லூரியில் படிக்க உள்ளதால், தனது உண்மைச் சான்றிதழ்களான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றுதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களும், நடுவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
தனது எதிர்காலத்தைக் கருதி உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதித்சூர்யா தரப்பில் தேனி நீதிமன்றத்தில் தனது சான்றிதழும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நீதிபதி மாணவரின் சான்றிதழை எங்கே இருந்தாலும் வருகின்ற 24-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.