#Breaking: “நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.. எங்களுக்கு விலக்கு வேண்டும்”- தமிழக அரசு!
நீட் தேர்வை ஏற்க முடியாது, தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் அதிகாரிகள் சிலர் நீட் தேர்வு தொடர்பாக காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்கள். இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குத் அளிக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும், இதுகுறித்த தெளிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.