நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது – எம்.பி.கார்த்திக் சிதம்பரம்

சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வானது, ரத்து செய்யப்படும் என்று, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனையடுத்து, நீட் தேர்வு குறித்து ஆராய அரசு தனி குழுவை அமைத்தது. இந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து, முதர்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து எம்.பி.கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், தமிழக அரசாங்கத்தின் எண்ணம், தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும். வருகிற காலங்களில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார்.