#BREAKING: நீட் மதிப்பெண் முறைகேடு..மாணவியின் தந்தை கைது..!
போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த பல்மருத்துவர் பாலச்சந்திரன் கைது.
போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக பல்மருத்துவர் பாலச்சந்திரனை பெரியமேடு காவல்துறையினர் கைது செய்தனர். ராமச்சந்திரன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அங்கு பாலச்சந்தரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. போலி சான்றிதழ் எப்படி கிடைத்தது..? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வாக்குமூலத்தை போலீசார் பெற்றனர். இந்நிலையில், எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வீட்டில் பல்மருத்துவர் பாலச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியமேடு போலீசார் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் போலீஸ் பாலச்சந்திரனை கைது செய்தது.
மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் அளித்த புகாரின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவரது தந்தை பல்மருத்துவர் பாலச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.