முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!
முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல், அரசின் விதிமுறைகளை மீறுவோருக்கும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது மசோதா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.