நீட் ஆள்மாறாட்ட மோசடி விவகாரம்! சிபிசிஐடி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த உதித் சூர்யா எனும் மாணவன் முதலில் பிநீட் தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டார். மேலும், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகின்றனர்.
மேலும், வெங்கடேசனின்நண்பரான சரவணனும் தன் மகன் பிரவீனை நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபடுத்தி மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களும் சிபிசிஐடி விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில், இடைத்தரகர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட இர்ஃபான் எனும் மாணவன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுகளை அறிக்கையாக அக்டோபர் 15ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் உத்தரவிட்டனர். மேலும், மேலதிகாரிகள் துணையின்றி இந்த ஆள்மாறாட்ட சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.