திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் கொண்டு வரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 பேர் தற்கொலை செய்த நிலையில், நீட் தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் நீட் தேர்வுகள் கொண்டு வரப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியல் இருந்தபோது தான் தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அன்றைக்கு மவுனமாக இருந்தது திமுக என கூறிய அவர், இன்றைக்கு திமுக, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறது என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…