“நீட்” போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: தந்தை கைது.. மாணவி தலைமறைவு!

Published by
Surya

நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ்மோசடியில் பல் மருத்துவரும், மாணவியின் தந்தையான பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த பல் டாக்டர் பாலச்சந்திரன் என்பவரின் மகள் தீக்‌ஷா, தனது தந்தையுடன் கடந்தாண்டு டிசம்பர் 7 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார். அப்பொழுது அந்த மாணவி தாக்கல் செய்த நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.

மருத்துவ கலந்தாய்வில் சமர்ப்பித்த சான்றிதழில் 610 மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரின் உண்மையான மதிப்பெண் 27 என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாணவி தீக்‌ஷா மற்றும் அவரது தந்தை மீது சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் செல்வராஜ் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் பெரியமேடு போலீசார், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவி மற்றும் அவரின் தந்தையை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் ஆஜராகாமல் பாலச்சந்திரன், தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவி தீக்‌ஷா மற்றும் அவரின் தந்தை பெங்களூரின் பதியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரை பதுங்கியிருந்த பாலச்சந்திரனை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

CSK vs RCB : ஆர்சிபி-ஐ பழிதீர்க்குமா சென்னை.? டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச தேர்வு.!

சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…

1 hour ago

மியான்மரில் கட்டடங்கள், ரயில் நிலையத்தை மிரள வைத்த நிலநடுக்கம்.! நெஞ்சை பதறவைக்கும் கோரக் காட்சிகள்…

பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…

2 hours ago

ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு விஜய் தான் திறப்பு விழா நடத்துனாரு! அண்ணாமலை பதிலடி!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…

2 hours ago

மேடையில் கன்பியூஸ் ஆன விஜய்.! கவிஞரின் பெயரை மாற்றி கூறியதால் குழப்பம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…

2 hours ago

மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., 59 பேர் உயிரிழப்பு.?

பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

3 hours ago

120 ரன்கள் அடிக்க முடியுமா? ரிஷப் பண்ட்க்கு சவால் விட்ட மைக்கேல் வாகன்!

ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…

4 hours ago