நீட் விலக்கு மசோதா: குடியரசு தலைவர் உடனே அனுமதி தர வேண்டும் – திருமாவளவன்

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதி தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தல்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் உடனே கையெழுத்திட்டு அனுமதி தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நீட்டுக்கு போராட்டம் வெடிக்கும். அந்த நிலையை மத்திய அரசு அனுமதிக்காது என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.