நீட் தேர்வு விலக்கு – நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டமுன்முடிவு – முதல்வர் அறிவிப்பு
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என முதல்வர் முகஸ்டலின் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டமுன்வடிவு நடப்புத் தொடரிலேயே கொண்டுவரப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும்.
நீட் தேர்வுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை சபையில் வலியுறுத்திய நிலையில், அதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் அளித்தார். தேர்தல் நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இந்த சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என குறிப்பிட்டார்.