நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி..மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.!
மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூரை சார்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகம் மறைவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதுள்ளனர்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.