நீட் தேர்வு : மாணவர்கள் பயப்பட வேண்டாம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் பயப்பட வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்.
கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறலாம் என்றும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகவில்லை என்றால் குழந்தைகளை திட்டுவது, கடிந்து கொள்வது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெறாத குழந்தைகளுக்கு யாருக்காவது இன்னமும் மன அழுத்தம், மன நெருக்கடி போன்ற குளறுபடிகள் இருக்குமானால் உடனடியாக, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மன நல ஆலோசகர் தலைமையில் உள்ள குழுவை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
#நீட் தேர்வில் வெற்றி பெறாத தேர்வாளர்கள் தற்காலிக பின்னடைவை மேம்பட்ட உத்திகள், வலுவான உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால் போராடி வெற்றி பெறவும், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் கேட்டுக் கொண்டார்.@PMOIndia @EduMinOfIndia
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 8, 2022