நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர்? உயார்நீதிமன்றம் கேள்வி!
ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர். என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவன் ஆள்மாறாட்டம் செய்ததாக நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிபிசிஐடி மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், தற்போது நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தின் எதிரொலியாக மாணவர்களிடம் ஆவணங்களை சரிபார்க்கும் வேலை நடந்து நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது இதுவரை ஆள்மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்கிற விவரம் தெரியவந்ததா? நீட் தேர்வு எழுதிய வரும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருவபவரும் ஒரே நபர்தானா என்பதை சோதித்து உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இதுவரை அப்படி யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பி உள்ளது.