நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்! வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
சில நாட்களுக்கு முன்னர் தேனி மருத்துவக்கல்லூரியில் படித்துவந்த உதித் சூர்யா எனும் மாணவன் நீட் நுழைவு தேர்வு எழுதுகையில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதகவும், நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட்டிலும், தற்போது உள்ள புகைப்படமும் வெவ்வேறாக இருப்பதாக இருந்த சந்தீகத்தின் பெயரில் எழுந்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரது மகன் தான் உதித் சூர்யா. இவர் ஏற்கனவே சென்னையில் இருமுறை நீட் எழுதி தேர்ச்சிபெறவில்லை. இந்தாண்டு நீட் தேர்வை மும்பையில் எழுதியதாகவும், அதில் குளறுபடி நடந்துள்ளதாகவும் மாணவர் உதித் சூர்யா மீது குற்றம் சாட்டப்பட்டு, ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், ஏமாற்றுவேலை என மூன்று பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கு தனிப்படை போலீசாரிடம் இருந்து, சிபிசிஐடி பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் அவர்களது கோணத்தில் விசாரிப்பார்கள் என்றும், கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.