நடக்குமா தேர்வு?! +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பா? இன்று முக்கிய முடிவு.
நாடு முழுவதும் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா மற்றும் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ என்கிற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, ‘நீட்’ நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெற்று இருக்க வேண்டும் ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக ஜூலை., 26க்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை அது கடவுளுக்கு தான் தெரியும் என்று முதல்வரே முன்மொழிந்த நிலையில் பள்ளித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் ,பல்கலை கழகத்தேர்வுகள் ஒட்டுமொத்தமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்கையை நடத்த வேண்டும்.மேலும் நாடு முழுவதும் கொரொனா கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வு குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது குறித்து, தன்னிச்சையாக கூற முடியாது.அரசு தான் முடிவுவெடுக்கும். நீட் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ளது. தமிழகத்தை போலவே, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நீட் தேர்வு நடக்குமா? இல்லை தேர்வினை மேலும் சிறிது காலத்திற்கு தள்ளிவைப்பதா? ஆகியன குறித்து மத்திய அரசின் முக்கிய முடிவு குறித்த தகவல் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று மாணவர்களும் ஆர்வத்துடனும்,எதிர்ப்பார்ப்புடனும் உள்ளனர்.