சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் திமுக சார்பில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.’
ஆனால் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ நீட் விலக்குக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்தார்.
இந்த விவரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ 2017 பிப்ரவரி மாதம் தமிழக அரசு சார்பில், நீட் விலக்கிற்காக 2 மசோதாக்கள் உள்துறை அமைச்சகத்திற்கு வந்திருந்ததாகவும், அதனை பரிசீலித்து, 2017 செப்டம்பர் 22ஆம் தேதி அந்த மசோதா தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும்’ தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுகவை சேர்ந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த விவகாரத்தில் உண்மை நிரூபித்தால் பதவி விலகுவதாக சவால் விடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…