இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு வகையானதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. அதைப் போல, நீட் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது.இதனை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து நீட் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. நீட் தேர்வு குறித்து அன்மையில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்., 13ம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்., 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ முலமாக தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் இத்தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் தேர்வு மையத்தை மாற்ற விரும்பினால், வரும், 15ம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை ஆனது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு:-செப்டம்பர்.,13ந்தேதி என்பது நினைவில்..
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…