நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் – குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி..!

Udhayanidhi

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி அவர்கள், நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைக்காக கடந்த காலத்தைப் போல அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்களின் ஒவ்வொரு கையெழுத்தும், தமிழ்நாட்டு கல்வி உரிமை போராட்டத்தின் உயிர் எழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒரு சிறிய கதை கூறினார். அவர் கூறுகையில், ஒருமுறை சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது உன்னைவிட நான் வலிமையாக உள்ளேன். ஆனால், நான் பூட்டை திறக்க கஷ்டப்படுகிறேன். ஆனால் உன்னால் மட்டும் எப்படி எளிதாக பூட்டை திறக்க முடிகிறது என்று கேட்டதற்கு, சாவி பதில் சொன்னது நீ என்னைவிட பலசாலி தான்.

ஆனால், பூட்டை திறக்க சுத்தியலாகிய நீ பூட்டின் தலையில் அடிக்கிறாய், ஆனால்  நான் அந்த பூட்டின் இதயத்தை தொடுகிறேன். அதனால் தான், என்னால் எளிதாக திறக்க முடிகிறது என்று சாவி சொன்னது. அதேபோல் பாஜக என்கின்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி, ஓங்கி அடித்தாலும், அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது.

ஏனென்றால், தமிழர்களின் இதயத்தை தொடும் திராவிட கொள்கை எனும் சாவியை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்