மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுவதாக சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.அதன,உறுதி செய்யும்விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (RIET) கல்லூரியில் நடந்த நீட் தேர்வு மையத்தில் இருந்து நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 லட்சம் பணம் மீட்கப்பட்டது.
ஆனால்,மறுபுறம் நம் தமிழகத்தில் நீட் தேர்வை மூன்றாவது முறையாக எதிர்கொள்ள மறுத்து தனுஷ் என்ற மாணவரும்,தேர்வு எழுதிய கனிமொழி மற்றும் சௌந்தர்யா என்ற இரு மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நீட் வினாத்தாளை கடத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்த அவலம் ஜெய்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுகின்றன. இந்த நீட் கொடுங்கோன்மையை நிறுத்த மாட்டோம் என இப்போதும் மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம்தானா?”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…