வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று சமத்துவம் மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி , வரும் 19ம் தேதி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வரும் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 37 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வேட்புமனு தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அதிலும் இரண்டு நாட்கள் கடந்து இன்னும் 4 தினங்கள் தான் உள்ளது. இதில் தற்போது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் புதிய வங்கிக்கணக்கு துவங்க முடியாமல், வேட்புமனு தாக்கல் செய்ய முடியவிலை என கூறி, வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…