நீட், ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்த நிலையில் தமிழக அரசும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ மற்றும் நீட் ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.மேலும் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்திஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி நீதிமன்றத்தை நாடுவது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரிகோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…