சென்னை:மழை வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ள சென்னை பெருநகர் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உதவி எண்களை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.மேலும்,சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கி கிடக்கின்றன.அதேபோல,வெளி மாவட்டங்கள், மாநிங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால்,மழை நீரை வெளியேற்றும் பணிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மீட்பு படையினர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு தொடர்பு கொள்ள 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.அதேபோல,மின்தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில்,நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கினார்.மேலும்,மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில்,சென்னை பெருநகரப் பகுதியில் மழை வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ள வசதியாக தென் சென்னை பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உதவி எண்களை அறிவித்துள்ளது.எந்தெந்த பகுதிக்கு உதவி எண்கள் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதன்படி,அவசர மருத்துவ உதவி /பிரசவ கால மருத்துவ உதவி, மின்கம்பம் அறுந்து /மரம் சாய்ந்து விழுந்ததால் பிரச்சனை,வீடுகளுக்குள் நிற்க இயலாத அளவிற்கு தண்ணீர் புகுந்ததால் தங்க இடம் மற்றும் உணவு இல்லாத சூழல் ஆகிய தேவைகளுக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல,மத்திய சென்னை பகுதியில் உள்ள மக்கள் தொடர்பு கொள்ளவும் DYFI எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.இதோ,
மேலும்,கீழ்கண்ட பகுதி மக்களும்,கீழே கொடுக்கப்பட்டுள்ள DYFI உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்த எண்களை மக்கள் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…