நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி…தந்தை, மகளுக்கு நிபந்தனை ஜாமீன்..!
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி செய்த வழக்கில் தந்தை, மகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண்முறையில் மருத்துவ காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட பரமக்குடியைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி நீட் தேர்வில் வெறும் 27 மதிப்பெண்கள் பெற்று 610 மதிப்பெண் பெற்றிருந்ததாக போலி சான்றிதழ் கொடுத்தது தெரியவர மாணவி தீக்க்ஷா மற்றும் அவரது தந்தையும் பல் மருத்துவருமான பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவி மற்றும் அவரின் தந்தையை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெரியமேடு போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் ஆஜராகாமல் பாலச்சந்திரன், தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரை கைது செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாணவி தீக்ஷா மற்றும் அவரின் தந்தை பெங்களூரின் பதியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரை பதுங்கியிருந்த பாலச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தந்தையும், மகளும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு விசாரித்த நீதிமன்றம், இருவரையும் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டு விட்டதால் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பெரியமேடு காவல் நிலையத்தில் பாலச்சந்திரன் ஆஜராக வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.