நீட் விலக்கு மசோதா:தமிழக ஆளுநர் இன்று டெல்லி பயணம்!

Published by
Edison

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

முதல்வர் விளக்கம்:

இதனையடுத்து,ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வு விலக்கு மசோதா,கடந்த 210 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி உள்ளது என்றும்,இந்த சூழலில் அதே மாளிகைக்கு சென்று ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும்.

இதனால்தான் தமிழக அரசு இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றும்,மற்றபடி ஆளுநர் மீது எப்போதும் மரியாதை உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

ஆளுநரின் கார் மீது கல் வீசப்பட்டதா?:

இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.

இதற்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.ஆனால்,அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று காவல்துறை மறுத்துள்ளது.

டெல்லி பயணம்:

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால் நாளுக்கு நாள் ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் டெல்லி பயணம்,மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Recent Posts

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

1 hour ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

2 hours ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

2 hours ago

சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…

2 hours ago

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…

3 hours ago

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

3 hours ago