“உடனே அடிப்படை வசதிகள் வேண்டும்” – ஈபிஎஸ் கோரிக்கை ..!

அடிப்படை வசதிகள் இன்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து திமுக அரசு பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “சென்னை மாநகரத்தில் மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அதிமுக ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையம் உலகத்தரத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பின் காலப்போக்கில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட காரணத்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாக பிரித்தோம்.

அதில் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மாதவரித்திலுருந்தும், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பாக்கத்திலுருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், தற்போது இந்த கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடையும் முன்னதாகவே அதற்கு கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர் இடப்பட்டு அவசரமாக திறந்து உள்ளனர்.

மேலும் திறக்கபட்ட அந்த பேருந்து நிலையத்தில் எந்த ஒரு உணவு , எடிஎம் (ATM), தண்ணீர் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யாமல் அவசரமாக திருந்துள்ளனர். மேலும் இந்த பேருந்து நிலையத்தை திறந்தது முதல் தற்போது வரை ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதியில் இருந்து வருகின்றனர்.

எனவே, அந்த பேருந்து நிலையத்திற்கு அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் எனவும் மேலும், சென்னை நகரத்திலிருந்து கிளாம்பாக்கம் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும் பொதுமக்களின் இந்த பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் ” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்