நீட் பலிபீடம்: உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – மு.க. ஸ்டாலின்.!

Default Image

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு – முக ஸ்டாலின்.

நாடு முழுவதும் திட்டமிட்டபடி நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும், நடப்பாண்டு தேர்வு நடந்து முடிந்தது. இதனிடையே தமிழகத்தில் நீட் தேர்வால் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல மாவட்டங்களில் இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உண்ணவிரோதம் போராட்டங்கள் நடத்தி, அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு.

எனினும், சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவைக் கைவிட்டு, மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், மருத்துவ கல்வி கனவினை தவிர்க்கும் பலிபீடமாக நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும், மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் கல்நெஞ்சத்துடன் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
india vs pakistan - shreyas iyer
Jayalalithaa Birthday - Rajinikanth
Sengottaiyan - ADMK Chief secretary Edappadi Palanisamy
Telangana tunnel collapse
TVK Leader Vijay - NTK Leader Seeman
gold prices