இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை தேவை-ஹெச்.ராஜா

Published by
Venu

பள்ளிகளில் இந்துமத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்ட தடையில்லை என அமைச்சர் கூறியுள்ளார் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் ,சாதிகளை குறிக்கும் வகையில் பல பள்ளிகளில் வண்ணக்கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதால் பள்ளிகளில் பிரிவினைகள் ஏற்படுவதால்,அவ்வாறு இருக்கும் பள்ளிகளை கண்டறிந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.அதேபோல் நெற்றியில் திலகமிடுவதும் கூடாது. பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த அறிவிப்பு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், காரைக்குடியில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற அறிவிப்பை பள்ளி கல்வி துறை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Related image

இதனையடுத்து நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறுகையில்,பள்ளி மாணவர்களின் கைகளில் கயிறு அணிவதில் பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடைமுறை மாற்றத்தையும் கொண்டுவரவில்லை மேலும் இது தொடர்பான அறிக்கை தனது கவனத்திற்கும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,  பள்ளிகளில் இந்து மத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்டுவதற்கும், நெற்றியில் திலகமிட்டு நிற்கும் தடையில்லை. ஆனால் நேற்றைய முன்தினம் அமைச்சர் அவர்களை கலந்து ஆலோசிக்காமல் சுற்றறிக்கை வெளிப்பட்டது என்றும் கூறியுள்ளார். எனவே இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் .

Published by
Venu

Recent Posts

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

10 minutes ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

19 minutes ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

1 hour ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

2 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

2 hours ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

3 hours ago