நீட் முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு தமிழக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.2018-ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் விவரத்தை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த முறைகேட்டில் சென்னையை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா உள்பட 15 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
2018-ம் ஆண்டு முறைகேடு நடந்ததாக சென்னை மருத்துவக்கல்லூரி ‘டீன்’ ஜெயந்தி சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் தனுஷ்குமாரையும், அவரது தந்தை தேவேந்திரனையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனுஷ்குமார் ‘நீட்’ தேர்வில் முதல் 50 இடங்களுக்குள் வந்து தெரியவந்தது.
இவரது தந்தை தேவேந்திரன் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கருங்கல் ஜல்லிகளை லாரிகள் மூலம் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதுவதற்கு தேவேந்திரன் இடைத்தரகர் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்தது தெரியவந்தது. தனுஷ்குமாருக்காக பீகாரில் ஒருவர் இந்தியில் தேர்வு எழுதி உள்ளார்.
ஆனால் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது என்பதால் அவர் மாட்டிக்கொண்டார். இதனால் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…