சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டம்..! பொதுமக்களுக்கு அழைப்பு…!

RNRavi

சென்னை ஆளுநர் மாளிகையில்  அக்டோபர் 15, 2023 முதல் அக்டோபர் 24, 2023 வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களுக்கு ராஜ் பவன், மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை ஆளுநர் மாளிகையில், ‘நவராத்திரி கொலு – 2023’ அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24, 2023 வரை கொண்டாடப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிறு) அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 (ஞாயிற்றுக்கிழமை) முதல் அக்டோபர் 24, 2023 (செவ்வாய்க்கிழமை வரை) தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களில் பங்கேற்க (பள்ளி மாணவர்கள்/ பொதுமக்கள் உட்பட) அனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.  விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.

விண்ணப்பங்களை பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை சென்னை ஆளுநர் மாளிகைக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்