இயற்கை எரிவாயு திட்டம்.. ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – பேரவையில் தகவல்!
ஓசூர் புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி என பேரவையில் தகவல்.
தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ.35,000 கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஓசூர் புதிய பன்னாட்டு விமான நிலையத்தை உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு சமர்ப்பித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.