இயற்கை மரண உதவித்தொகை , ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு ..!

Published by
murugan

பழங்குடியினருக்கு வழங்கப்படும் இயற்கை மரண உதவித்தொகை மற்றும், ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு.

பழங்குடியினர் நல இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், பழங்குடியினர் நல வாரியம் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை. மூக்குக் கண்ணாடிகள் வாங்கிட உதவித்தொகை ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும். அனைத்து நல வாரியங்களாலும் இதேபோன்று உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சீர் மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000 ஆகவும், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ5,000 ஆகவும் உயர்த்தி வழங்குவது போலவே பழங்குடியினர் நலத்துறையிலுள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ5,000 லிருந்து 20,000 ஆகவும், அன்னாரின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதனடிப்படையில், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி  தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

சமூக ஆர்வலர் லாரி ஏற்றிப் படுகொலை! கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

சமூக ஆர்வலர் லாரி ஏற்றிப் படுகொலை! கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!

சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…

11 minutes ago

Live : விஜயின் பரந்தூர் பயணம் முதல்… அமெரிக்க அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் வரை…

சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…

49 minutes ago

பண மோசடி வழக்கு! ஷகிப் அல் ஹசனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…

1 hour ago

ஒரிஜினலா? டூப்பா? பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தால் எழுந்த ‘புதிய’ சர்ச்சை!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…

2 hours ago

பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்! மற்றவர்களுக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…

3 hours ago

கோ கோ உலக கோப்பைகளை வென்ற இந்தியா அணிகள்! பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…

3 hours ago