இயற்கை மரண உதவித்தொகை , ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு – தமிழக அரசு அறிவிப்பு ..!
பழங்குடியினருக்கு வழங்கப்படும் இயற்கை மரண உதவித்தொகை மற்றும், ஈமச்சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு.
பழங்குடியினர் நல இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், பழங்குடியினர் நல வாரியம் 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை. மூக்குக் கண்ணாடிகள் வாங்கிட உதவித்தொகை ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும். அனைத்து நல வாரியங்களாலும் இதேபோன்று உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சீர் மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000 ஆகவும், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ5,000 ஆகவும் உயர்த்தி வழங்குவது போலவே பழங்குடியினர் நலத்துறையிலுள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ5,000 லிருந்து 20,000 ஆகவும், அன்னாரின் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவியை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆகவும் உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்தது. அதனடிப்படையில், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இயற்கை மரண உதவித்தொகை மற்றும், ஈமச்சடங்கு உதவித்தொகை உயர்வு.#TNGovt pic.twitter.com/eXc73U9Jdo
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 12, 2021