- ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 29-ம் தேதி தேசிய புள்ளியியல் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- இதையொட்டி புள்ளியியல் தொடர்பான பிரிவுகளில் கட்டுரைப் போட்டியை நடத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்ததுள்ளது.இந்த புள்ளியியல் சார்ந்த கட்டுரைப் போட்டியை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தற்போது அறிவித்துள்ளது.
இதற்கான முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க்க விரும்புவோர் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த கட்டுரைப் போட்டியானது போட்டியின் நிகழ்விடத்திலேயே இரண்டு தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு தலைப்பில் சுமார் 5,000 வார்த்தைகளில் குறையாமல் கட்டுரையை எழுத வேண்டும். இதற்கு 3 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும். இதில் முதுகலை மாணவர்கள் கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர். இந்த போட்டிகளில் பங்கேற்க்க விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவன துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று, அதனை இரண்டு பிரதிகள் எடுத்து அதனை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அந்த முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜனவரி மாதம் 20 தேதி ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களின் பட்டியல், புள்ளியியல் தினத்தன்று அறிவிக்கப்படும்.இதில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரூபாயும், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.12 ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் 5 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த முகவரி,
Deputy Director, Training Unit, National Statistical Office,
Ministry of Statistics & Programme Implementation, 3 rd Floor,wing-C,
Puspha Bavanan, Madangir Road, New Delhi-110062.