சென்னை:தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு,இன்றைய நாள் துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாளாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் நான்காவது தூண் என ஊடகங்கள் அழைக்கப்படும் நிலையில்,சட்டப்பூர்வ மற்றும் அரை-நீதித்துறை நிறுவனமான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி “தேசிய பத்திரிகை தினம்” அனுசரிக்கப்படுகிறது.இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கிறது.
இந்நிலையில்,நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தினம் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தினம் வாழ்த்துகள்”, என்று பதிவிட்டுள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…