#NationalPressDay:பத்திரிகையாளர்களுக்கு…முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இனிப்பான வாழ்த்து!

சென்னை:தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு,இன்றைய நாள் துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாளாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய நாட்டின் நான்காவது தூண் என ஊடகங்கள் அழைக்கப்படும் நிலையில்,சட்டப்பூர்வ மற்றும் அரை-நீதித்துறை நிறுவனமான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி “தேசிய பத்திரிகை தினம்” அனுசரிக்கப்படுகிறது.இந்த நாள் இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகை இருப்பதைக் குறிக்கிறது.
இந்நிலையில்,நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தினம் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தினம் வாழ்த்துகள்”, என்று பதிவிட்டுள்ளார்.
துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று!
உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன!
நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025