தூத்துக்குடியில்இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது தேசிய மனித உரிமை ஆணையம்..!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள், இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடிக்கு நேற்று மாலை வந்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் புபுல் புட்டா பிரசாத் தலைமையிலான 5 பேர் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரட்கார், மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து இன்று, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர், தம்மிடம் உள்ள ஆவணங்களை தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.

இதனிடையே மனித உரிமை ஆணையக் குழுவில் இடம்பெற்றுள்ள 2 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவருவோரைச் சந்தித்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த குழுவினர் வரும் 7ஆம் தேதி வரை தூத்துக்குடியில் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும், அதன்பிறகு, தேசிய மனித உரிமை ஆணையத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)
18.11.2024 Power Cut Details