எண்ணூர் எண்ணெய் கசிவு… அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள் அனைத்திலும் கச்சா எண்ணெய் படிந்தது. இதனை அடுத்து எண்ணெய் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது எண்ணெய் கழிவுகள் பெரும்பாலும் அகற்றப்பட்டு விட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவியும் அறிவித்தது.
அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!
இதற்கிடையில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ” கடந்த டிசம்பர் 19ம் தேதி எண்ணெய் கசிவு முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. 1,937 ஊழியர்கள், அதிநவீன இயந்திரங்களுடன் எண்ணெய் கசிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 40 பறவைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு எங்கிருந்து ஏற்பட்டது என ஆய்வு செய்ததில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிவு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகமான கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டது. எண்ணெய் அகற்றப்பட்டாலும் அடுத்த மூன்று மாதத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிசிஎல் தரப்பில் ” தங்கள் நிறுவனத்தில் இருந்து எந்த எண்ணெய் கசியவில்லை என்றும் எண்ணெய் கசிவுக்கு காரணம் எந்த நிறுவனம் என தெரியாமல் சிபிசிஎல் மீது குற்றம் சாட்டப்படுவது விசாரணை இல்லாமல் தண்டனை வழங்குவது போல் உள்ளது. எண்ணூரில் சுமார் 200 நிறுவனங்கள் செயல்படுகிறது. அதில் எத்தனை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது என அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.
ஜன.13ல் அமித் ஷாவுடன் அனைத்து கட்சி குழு சந்திப்பு!
இதைத்தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் எண்ணூரில் எண்ணெய் கசிவு விவகாரத்தில் மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பி இது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.