தேசிய கொடியை அவமதித்த வழக்கு – முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு
தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.