மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை! – மு.க.ஸ்டாலின்
மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், சற்று நேரத்திலேயே, தேர்வு முகமை இந்த தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது. சில மணி நேரங்களுக்கு பின், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், ‘தேர்வு முகமை மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது என்றும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.