நெருங்கும் புயல்… களத்தில் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை!
தமிழகம், புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 11 குழுவினர் களத்தில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ள நிலையில், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் ஏற்கெனவே 8 குழுக்கள் தயார் நிலை உள்ளனர். அதேபோல் சென்னை, கொளத்தூரில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் முன்னெச்சரிக்கையாக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
புயலின் வேகம் (7 கி.மீ) குறைவாக உள்ளதால் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நேரத்திற்கு நேரம் புயலின் திசை மாறுபடுகிறது, இதனால் அதன் கரையை கடக்கும் இடமும் மாறுகிறது. அதன் காரணமாக, வரும் நேரங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது.