மதுரைக்கு சென்றடைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு ….!

மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழு மதுரைக்கு சென்றடைந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் நீர் தேங்கி காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மதுரை வந்தடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் மழை ஏற்பட்டால் உதவுவதற்கு விரைந்து செல்லும் வகையில் 44 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025