நெல்லை கண்ணன் கைது ஏன்.. விளக்கம் அளித்த எடப்பாடி… வீருகொண்டு எழுந்த எதிர்கட்சி…
- தமிழ்நாடு சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.
- குடியுரிமை விவகார கைது குறித்து விளக்கம் அளித்த முதல்வர்.
இந்நிலையில் சட்டபேரவையின் இரண்டவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், பட்டிமன்றபேச்சாளர் நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார், அதில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டரீதியாக தான் நடவடிக்கை எடுத்துள்ளோம். எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களைப் பற்றி வரம்பு மீறி எதுவும் பேசக்கூடாது. அவர் அப்படி பேசியதால் தான் கைது செய்யப்பட்டிருக்கிரார். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்று கூறினார். இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூறிய முதல்வர், வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் புகாரளித்ததால் அவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டவர்கள் யாரென்று அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். கோலம் போடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.