முதலிடம் பெற்றதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது.!

Default Image
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 விருதுகளை தமிழ்நாடு பெற்றது.
  • தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.

டெல்லியில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 விருதுகள் தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு வழங்கப்பட்டது. தமிழகம் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சமவெளிப் பகுதிகளில் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது. நீர்ச் சேமிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் முதலிடம் பெற்றதற்காகத் தமிழக அரசுக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் 15-ம் இடத்தைப் பிடித்த வேலூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது. உரிய காலத்தில் ஊதியத்தை வழங்கியதில் முதலிடம் பிடித்ததற்காகத் திருச்சி மாவட்டத்துக்குத் தேசிய விருது. பின்னர் உரிய காலத்தில் பணி முடித்ததில் இரண்டாமிடம் பெற்ற கரூர் மாவட்டத்துக்குத் தேசிய விருது வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா 1 என 8 தேசிய விருதுகளும், மேலும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக 1, ரூர்பன் திட்டத்தின் கீழ் 2, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் தேசிய தங்க விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார். மேலும், தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்